திங்கள், 8 ஜூலை, 2013

NLC தொடரும் போராட்டம் - குறைந்து வரும் மின் உற்பத்தி மின்தடை அதிகரிக்க வாய்ப்பு!

நெய்வேலி: என்.எல்.சி தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மேலும் மின் தடை அதிகரிககும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் 5 சதவிகித பங்கு விற்பனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத் தடையையும் மீறி என்.எல்.சி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த 27 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், மின் உற்பத்தி அளவானது 3 அனல் மின்நிலையங்களையும் சேர்த்து முழு அளவான 2490 மெகாவாட் என்கிற நிலையில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கிவிட்டது.
நேற்று மின் உற்பத்தி 2 ஆயிரத்து 73 மெகாவாட் என்கிற நிலையில் இருந்தது. இது வழக்கமான அளவை காட்டிலும் 417 மெகாவாட் மின் உற்பத்தி குறைவு ஆகும். எனவே போராட்டம் நீடிக்க்கும் பட்சத்தில் மின் உற்பத்தி மேலும் குறையும் அபாயம் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக