பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தில் பாய்லர் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த வாலிபர் 186 அடி உயரத்தில் இருந்து இருந்து தவறி விழுந்து பலியனார்பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தில் ILFS தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பீகார் மாநிலம் முசாம்பூர் மாவட்டத்தை சேர்ந்த பூட்டான்மித்தோர் மகன் ரவீந்திரகுமார் (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு 186 அடி (62 மீட்டர்) உயரத்தில் பாய்லர் டவர் அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த ரவீந்திரகுமார் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். ரவீந்திரகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். பாதுகாப்புக் கவசத்தை சரியாக அணியாததால் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது இது குறித்து சக ஊழியர் பீகார் மாநிலம் பைசாவி மாவட்டத்தை சேர்ந்த சுமோத்குமார்(20) என்பவர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த ரவீந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக