பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மத்தி மீன் நேற்று வழக்கத்திற்கு
மாறாக அதிக விலைக்கு விற்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை தினமும் 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
நேற்று பரங்கிப்பேட்டை கடலில் மீனவர்கள் வலையில் மத்தி மீன் குறைவாகவே பிடிப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக விலை அதிகரித்தது. மத்தி மீன் வழக்கமாக 45 கிலோ கொண்ட பாக்ஸ் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படும். நேற்று 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களுக்கு குறைந்த அள விலான மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக