ஞாயிறு, 7 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் 14-வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா

பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கடந்த 14 ஆண்டுகளாக , அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் அணைத்து சமூக சாதனை மாணவ - மாணவியர்களுக்கு தங்க பதக்கம் வழங்கி பாராட்டு விழா நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான கல்வி பரிசளிப்பு  விழா
 நேற்று (06/07/2013)மாலை பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில்,  நடைபெற்ற  இவ்விழாவினை, மீராப்பள்ளி இமாம் M.S. அஹமது கபீர் காஷிபி இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்  பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும்,  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் M.S.முஹம்மது யூனுஸ், மீராப்பள்ளி நிர்வாகி K.ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், HMH பள்ளிவாசல் முத்தவல்லி H.M.ஹனிபா, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் R.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மனித நேயமிக்க இவ் விழாவில் , சிறப்பு விருந்தினர்களாக  அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் K.கதிரேசன் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் மருத்துவர் S.ரவிச்சந்திரன் ஆகியோர்  கலந்துகொண்டு  சாதனை மாணவ மாணவிகளுக்கு  தங்கம் - வெள்ளி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் அஸ்ஷைகு  M.H.கபீர் அஹமது மதனி, தவுலத்துன்னிஸா பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் M.அப்துல் காதர்  மரைக்காயர் உமரி, அல்ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் S.I.அப்துல் காதர் மதனி ஆகியோர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் B.ஹமீது கவுஸ் நன்றியுரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள் களுக்கு  இறைமறை  திருக்குர்ஆன் வழக்கப்பட்டது  இவ்விழாவில் ஏராளமான மாணவ - மாணவியர்கள், பெற்றோர்கள் , பொதுமக்கள் கலந்துக்கொண்டனர் 









 


 

படங்கள்:கிங் காலித்
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக