வெள்ளி, 12 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை மீன் இறங்கு தளத்தை திறக்க முதல்வருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மீன் இறங்கு தளத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் செழியன் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்:
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட
அன்னங்கோவில் மீன் இறங்கு தளம் 13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கப்படும் மீன் வகைகள் சுகாதாரமற்ற முறையில் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் இங்கிருந்து அனுப்பப்படும் மீன் வகைகளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.
தற்போதுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மீன் வியாபாரி சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் வகைகளை பதப்படுத்தி அனுப்பி வருகின்றனர்.
எனவே, புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக