சனி, 13 ஜூலை, 2013

இவளே இஸ்லாமிய பெண்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்ஹூ
இவளே இஸ்லாமிய பெண்மணி என்ற தலைப்பில் எனது கட்டுரையை ஆரம்பம் செய்வதில் மகிழ்ச்சி. ஒரு பெண் என்பவள் சில செயல்களை செய்யும்போது அவளுடைய தன்மை பொருத்து, தன்மையை கொண்டு அழைக்கப்படுவாள். அதிலும் இஸ்லாமிய பெண் என்பவள் இஸ்லாம் அறிவுறுத்தும் செயல்களை செய்யும்போதுதான் இவளே இஸ்லாமிய பெண் என்று அழைக்கப்படுகிறாள். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

தர்மம் விசயத்தில்:
...
மார்க்கத்தை பேணி பாதுகாக்க கூடிய முஸ்லிமான பெண் எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவாள். அல்லாஹ்வின் அருட்கொடை தன்னை சூழ்ந்திருக்கும் நேரத்தில் அதற்காக நன்றி செலுத்துவதை மறந்து விட மாட்டாள். அதே போல் சோதனைகளும், சிரமங்களும் ஏற்படும்போது பொறுமை காத்துக்கொள்வாள்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்த விசயங்களை அலட்சியப்படுத்தமாட்டாள். நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் கண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த நரக பெண்களில் தானும் இருந்து விடக்கூடாது என்று அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவாள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; பெண்களே! நீங்கள் அதிகம் தர்மம் செய்யுங்கள். நரகத்தில் உங்களைத்தான் நான் அதிகமாக பார்த்தேன். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதிகமாக நரகத்தில் இருக்க என்ன காரணம்?" என்று பெண்கள் கேட்டனர். "நீங்கள் அதிகமாக சபிக்கிறீர்கள். கணவருக்கு மாறு செய்கிறீர்கள். கூறிய அறிவுடைய ஆண் மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்திலும் குறை உடையவர்களாக இருக்கும் நீங்கள் போக்கி விடுகிறீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (சஹீஹுல் புஹாரி).

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டி இருக்கும் தர்மங்களை செய்வதிலேயே ஈடுபாடு காட்டவேண்டும். அந்த தர்மங்கள்தான் நாளை மறுமை நாளில் தங்களை அழிவிலிருந்து பாதுகாக்க கூடியது என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விற்கும் மறுமை நாளிற்கும் அஞ்சாமல், வாழ்க்கையில் ஒழுக்கமின்றி வாழ்ந்த பெண்கள், மறுமையில் நஷ்டத்தில் இருப்பார்கள். அவர்களிடம் இருந்த தீய பண்புகளே அவர்களை நரகத்தில் புகுத்திவிட காரணமாகிவிடும். மாறாக, நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்கள் தம் கணவரை கண்ணியப்படுதுவதிலும், அவரின் நற்குணங்களை நினைவு கூர்வதிலும், அழகிய பண்புகளை பரப்புவதிலும் முன் உதாரணமாக திகழ வேண்டும்.

ஆடை விசயத்தில்:

இஸ்லாம், பெண்களுக்கென்று சில ஒழுக்க மாண்புகளை கற்று கொடுத்து அவருக்கு தனித்த ஆடை அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அந்நிய ஆண்களுக்கிடையே செல்வதற்கு அல்லது வீட்டை விட்டு செல்லும்போதோ, அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய ஹிஜாப்-பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.

ஒரு முஸ்லிம் பெண்மணி, இஸ்லாமிய பண்பாற்றில் வளர்ந்தவலாகவும், இஸ்லாமின் நீண்ட நிழலில் இளைப்பாரியவளாகவும் இருப்பாள். எனவே, இஸ்லாம் கூறும் ஹிஜாபை திருப்தியுடனும், மிக அழகான விருப்பத்துடனும் ஏற்றுக்கொள்வாள். இது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளை ஆகும். மற்றவர்களின் விருப்பதிற்காக அணிவதிர்க்கில்லை.

அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்ட முஸ்லிமான பெண் தனது கணவர் அல்லாத பிற ஆடவரை ஏறிட்டும் பார்க்க மாட்டாள். மஹ்ரம் அல்லாத ஆண்களின் மீது தனது பார்வையை செலுத்த மாட்டாள்.

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்களும் தங்கள் பார்வையை தாழ்த்தி கொள்ளட்டும். (அன்-நூர் 24:31)

என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான். எனவே, முஸ்லிமான பெண் தனது பார்வையை பேனுதலாகவும், கட்டுப்பாடுடனும் வைத்து இருக்க வேண்டும்.

ஒரு பெண் தனது பார்வையை தாழ்த்தி இருப்பதென்பது, அவளது கற்ப்பு பரிசுத்தமாக இருப்பதுக்கும், உணர்வுகள் தூய்மையாக இருப்பதுக்கும் மிகப்பெரிய அடையாளமாகும்.

"அந்த சொர்க்க சோலைகளில் கீழ் நோக்கிய பார்வைகளை உடைய அழகிய கன்னிகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை யாதொரு மனிதன்னும், ஜின்னும் தீண்டி இருக்க மாட்டார்கள். (அர்-ரஹ்மான் 55:56)

குணம் விசயத்தில்:

அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்களிடம் பெண்களின் மிக சிறந்தவர் யார்? எனக் கேட்க பட்டது. அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் கணவர் அவளை பார்த்தல் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவரது ஆன்மாவிலும் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள் என்று கூறினார்கள். (அஹ்மத்)

கணவருக்கு நிம்மதியும், மகிழ்ச்சியையும், நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித் தன்மை பற்றி நபி அவர்களின் உயர்ந்த கண்ணோட்டம் ஆகும்.

சிறந்த பெண்மணியே, சிறந்த மனைவியாகவும் இஸ்லாத்தின் மீது ஈடுபாடும் பற்றும் கொண்டவளாக இருப்பாள். அவளுடைய மனத்திலோ ஈமான் இருக்கும். அவளுடைய குனதிலோ அன்பு இருக்கும். கணவருக்கு மட்டுமல்லாது குணத்தினால் பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளையாகவும், குழந்தைக்கு சிறந்த தாயாகவும் மொத்தத்தில் இவள்தான் இஸ்லாமிய பெண்மணி என்று கூறுவதாக இருப்பாள்.

பெண் என்பதற்கும், இஸ்லாமிய பெண் என்பதற்கும் உள்ள வேறுபாடே அவள் பின் பற்றும் மார்க்கத்தின் அளவை பொறுத்ததே.

உலகம் அனைத்தும் இன்பம்தான். உலக இன்பத்தில் மிக சிறந்தது நல்ல பெண் ஆவாள் (முஸ்லிம்)

உங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக
 
முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த ட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது
கட்டுரையாளர் :சகோதரி  : முஹபுன்னிசா
நன்றி :திண்ணை குழுமம்
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக