திங்கள், 8 ஜூலை, 2013

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை, பரங்கிப்பேட்டையில் 5 மீமீ பதிவு


கடலூர்:கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடலூரில் அதிகபட்சமாக 46 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. அதனால் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால் நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.
    விவசாயிகள் மாற்றுத் தொழிலைத் தேடினர்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கி
தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்மாவட்டங்களில் பெய்து வரும் பருவமழை மேகமூட்டங்கள் காற்றின் வேகத்தால் வடமாவட்டங்களுக்கு அடித்து வரப்படுகின்றன.
இந்த மேகமூட்டத்தால் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ):
    கடலூர் 46.4, வானமாதேவி 39.20, அண்ணாமலைநகர் 17.20, சேத்தியாதோப்பு 1.50, மேமாத்தூர் 10, பண்ருட்டி 8.30, பரங்கிப்பேட்டை 5, சிதம்பரம் 7 மி.மீ மழை பெய்துள்ளது.
இதனால் விதைப்பு செய்யும் விவசாயிகள் நிலத்தை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
photo:file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக