செவ்வாய், 9 ஜூலை, 2013

இஸ்லாமிய ஒற்றுமை

அளவில்லா கருணையும் இணையில்லா கிருபயமுடைய ஏக இறைவனின் திருபெயரால் ....


கட்டுரையின் உள்ளடக்கம்
--------------------------------------------
முன்னுரை

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள்

குர்'ஆன் கூறும் ஒற்றுமை

ஒற்றுமைக்கான வழிகள்

- உலக விசயத்தில் முஸ்லீம்கள் ஏற்படுத்தும் ஒற்றுமை

- ஒற்றுமை என்னும் பெயரில் நபியை மீறுதல்

- ஒருவழி தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் .

முடிவுரை

முன்னுரை:
--------------------
அஸ்ஸலாமு அழைக்கும் !

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே ! இந்த கட்டுரையில் இஸ்லாமிய ஒற்றுமைப்பற்றி சற்று சுருக்கமாக எழுதி உள்ளேன் , அவசரமாக படிபவர்களின் வசதிக்கு ஏற்ப தலைப்புகளை குருபிட்டு எழுதி உள்ளேன் .நீங்கள் விரும்பியதை முதலில் படித்து,விட்டு பின்பு பொறுமையாக மற்றவையை படிக்கவும்.குறைகளை
நிறைவாக சுட்டி காட்டவும்.

'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!'

(அல் குர்'ஆன் 42:13)

இந்த ஒரு வசனம் போதும் ஒற்றுமைக்கு , ஆனால் மார்க்கம் எது
என்பதையும் , இஸ்லாமிய ஒற்றுமையையும் விரிவாக இக்கட்டுரையில் சில தலைப்புகளுடன் பார்போம்.

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார் '

(புஹாரி 13 )

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள்:
--------------------------------------------------------
அல்லாஹ்வின் வேதமும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிமுறை மட்டும் தான் .

அல்லாஹ் தான் இறக்கியதை மட்டும் பின்பற்றுமாறு கட்டளை விதிக்கிறான்

"உங்கள் இறைவனிடமிருந்து உங்க ளுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங் கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்!
குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!".

(அல் குர்'ஆன் 7:3)

அதாவது வஹியை நபிக்கு வெளிபடுதியத்தை மட்டும் பின்பற்ற சொல்கிறேன்

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ஹஜ்ஜதுல் விதாவில் (இறுதி ஹஜ்ஜில் )

இரண்டை விட்டு செல்கிறேன் அவ்விரண்டையும் நீங்கள் பற்றி
பிடிக்கும் வரை வழிதவரமாட்டீர்கள்

1. அல்லாஹ்வின் வேதம் 2. என்னுடைய வழி

( ஹாகிம் 318)

இந்த இரண்டு ஆதாரங்களை வைத்து தான் நாம் எல்லா காரியங்களையும் மார்க்கத்தில் வகுக்க வேண்டும் , இதனை வைத்து தான் நாம் இஸ்லாமிய ஒற்றுமையை பேண வேண்டும்.

வரம்பு மீறினால் வழிகேடே !

"அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு
செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்."

(அல் குர்'ஆன் 33:36).

குர்'ஆன் கூறும் ஒற்றுமை:
-----------------------------------------------
இந்த உலகை படைத்து அருட்கொடைகளை தந்த அல்லாஹ் நம்மை அவன் வேதத்தின் மூலம் ஒற்றுமையை பற்றி மிக அழகாக கற்பித்து இருக்கிறான் . பின்வரும் வசனத்தை படித்தால் மிக அழகாக புரியும் .

அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால்
சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள்.
அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

(அல் குர்'ஆன் 3:103)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறும் ' கயிறு ' இஸ்லாமிய மார்க்கம் ஆகும் , சஹாபாக்கள் பல பிரிவாக அறியாமை இருந்து தங்களுக்குள் போர் புரிந்தும் இருந்தனர், ஓரிறை தத்துவத்தை ஏற்றவுடன் அவர்களுக்குள் அல்லாஹ்வே அல்லாவே இணைப்பை ஏற்படுத்தினான்.

இந்த வசனத்திலிருந்து விளங்கலாம் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டால் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர் கள்!
(அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்

(அல் குர்'ஆன் 8:46)

நாம் ஒற்றுமையை அல்லாஹ்வுக்கும் நபிக்கும் முரண்பட்டு இழந்துவிட கூடாதென்றும் அல்லா வலியுறுத்துகிறான்.

"அல்லாஹ்வை வணங்குங்கள்! அவ னுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,
நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்."

(அல் குர்'ஆன் 4:36)

அல்லாஹ் இங்கு குறிப்பிட்ட அனைவருக்கும் நன்மை செய்யவே சொல்கிறான் !

மார்க்கத்தில் பிரிவினையை ஏற்படுத்துபவர் முஸ்ரிக்கே !

இன்னும் , அல்லாஹ் கூறுகிறான் சூராஹ் அல் அனாம் வசனம் 106

"(முஹம்மதே!) உமது இறை வனிடமிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!"

அல்லாஹ் இணை கற்பிப்போரைப் புறக்கணிக்க சொல்கிறான் , இணை கற்பிப்போர் என்றால் சிலை வணங்கிகள் , யூத கிறித்தவர்கள் மற்றும் மஜூசிகள் மட்டும் அல்ல ! அல்லாஹ்வின் தூதரின் மார்க்கத்தை மீறி வேறு ஆதாரம் எடுத்துக்கொண்ட அனைவரும் இணை கற்பிப்போர் தான் !

நாம் இன்று பார்த்துகொண்டு தான் இருக்கிறோம் உலகில் முஸ்லீம்கள் என்று சொல்லி கொண்டு எத்தனையோ பெயர் வணக்க விசயங்களிலும் தூதருக்கு மாறு செய்து
, வருகின்றனர் மாருசெஇபவர்கல் தான் இஸ்லாத்தில் பிரிவை உண்டுபடுதுபவர்கள்
. அந்த பிரிவை உண்டு படுத்தும் சாராரில் இயன்ட்ரவரை பட்டியல் இடுகிறான் இவர்களிடம் நீங்கள் ஒற்றுமையை நாடி போனால் அல்லாஹ்வின் பாதையை (வேதம்
மற்றும் நபிவழி ) விட்டு உங்களை வழிகெடுத்து விடுவார்கள்

1. வேதம் மட்டும் போதும் என்பவர்கள் .
2. வேதம் மற்றும் நபிவழியை சஹாபாக்கள் மட்டும் தான் சிறப்பாக விளங்க முடியும் என்பவர்கள் .
3.முதல் மூன்று தலைமுறையினர் செயல் , சொல் , அங்கிகாரம் மற்றுமே மார்க்கம் என்பவர்கள் .
4. இமாம்கள் மட்டும் தான் மார்க்கம் சொல்ல வேண்டும் என்பவர்கள் .
5. இறந்தவர்களை ப்ரார்த்திக்கவிட்ட வேடிக்கை பார்க்கும் சமாதி வழிபாடு செய்யும் சாரார்.
6.இஸ்லாமிய ஆட்சி தான் லட்சியம் , மற்ற சுன்னாஹ்வெல்லாம் ஆட்சிக்கு பின்பு பார்த்துகொள்வோம் என்று கூறுபவர்கள்.
7.விதியை நம்பாதவர்கள்
8. நபி ஸல் அவர்களுக்கு பின் , தூதர் மற்றும் நபி இருப்பதாக வாதிடுபவர்கள்.
9. மெஞ்ஞான நேசர்கள் , பெரியார்களை பின்பற்றுபவர்கள் மற்றும் முன்னோர்களை பின்பற்றுபவர்கள் .
10.அலி (ரலி ) மற்றும் அவர்கள் குடும்பத்தினரை அல்லாஹ்விற்கு இணையாக்கியவர்கள்.

இஸ்லாத்தின் பெயரால் இது போன்றவர்கள் வெவேறு பெயர்களில் வந்து ஈமானை கொள்ளை அடித்து கொண்டு இருகின்றனர்

இவர்களை விட்டும் நாம் விலகி ,

நபி ஸல் அவர்கள் எப்படி தன்னுடைய தோழர்கலுடன் வாழ்ந்து காட்டினார்களோ அவ்வாறே வாழ்ந்து ஒற்றுமையாய் வாழ்ந்தால் வெற்றிபெறலாம் !

, நாமும் சரி இவர்களின் சிலரோ அல்லாது இவர்களில் ஒருவர் சரி என்றால் சொன்னால் அல்லாஹ் நம்மையும் முஷ்ரிக் பட்டியில் சேர்த்துவிடுவான் !

பின்பு நம் தங்குமிடம் நிரந்தர நரகம் ஆகிவிடும் .

இவர்களை நீங்கள் ஆதரித்தீர்கள் ஆனால் 83:15 வசனப்படி உங்கள் இறைவனை நீங்கள் முடியாது !

"அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். "

ஒற்றுமையாய் அல்லாஹ்வின் கயிறான இஸ்லாமிய மார்க்கத்தை குர்'ஆன் மற்றும் ஹதீஸோடு ஆராய்ந்து படிப்பினை பெற்று வாழ்ந்தோமே ஆனால் இன் ஷா அல்லா ஈருலக
வெற்றி பற்று படைத்த ரப்பை 75:22, 23 வசனம் கூறுவது போல் மறுமையில் பார்க்கலாம்

"அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.

தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்".

மேலும் இந்த ஒரு வசனத்தை வைத்து பிரிவை எச்சரித்து பின்பு ஒற்றுமைக்கான வழியை பற்றி பார்ப்போம் !

"தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே
உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்."

(அல் குர் 'ஆன் 6:159)

ஒற்றுமைக்கான வழிகள்!!!
---------------------------------------------------------
இந்த தலைப்பை மூன்றாக பிரித்து காண்போம் :

- உலக விசயத்தில் முஸ்லீம்கள் ஏற்படுத்தும் ஒற்றுமை.

- ஒற்றுமை என்னும் பெயரில் நபியை மீறுதல்.

- ஒருவழி தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்..

1. உலக விசயங்களில் முஸ்லீம்கள் ஏற்படுத்தும் ஒற்றுமை

நாம் சில நாட்களுக்கு முன்பு கண்கூடாக பார்த்தோம் விஸ்வரூபம் என்ற விஷம திரைபடத்தை கமலஹாசன் என்னும் சினிமா நடிகர் தயாரித்து இயக்கி நடித்து நாட்டில் கலவரத்தை ஏற்படுத்து ,விதித்தார் அதனை ஒற்றுமொதமாக செய்து முஸ்லீம்கள் எதிர்த்து ஓரளவு நல்ல தீர்ப்பையும் எட்டி உள்ளனர்.

இதுபோல் வரக்கூடிய காலங்களிலும் ஒன்றுபடுவதில் தவறு ஏதும் இல்லை .

மார்க்க விசயத்தில் இது போல் வணக்கங்களை திரித்து செய்வது இணைகற்பிக்கும் செயலாகும் !

மற்றொன்று என்னவென்றால் மார்க்கம் அனுமதித்த சகோதரத்துவம் மற்றும் அணைத்த உலக காரியங்களுக்கும் மாற்று கொள்கை உடையவரிடம் ஒற்றுமை பேணுதலில் தவறில்லை .

பெற்றோர், நண்பர்கள் , வியாபாரிகள் போன்றவர்கள் மாற்று கொள்கையில் இருந்தால் அவர்களுடன் உலக விசயத்தில் சமரசம் செய்து கொள்ளலாம் அவர்களின் ஆலோசனையையும் பெற்று கொள்ளலாம்.

உதாரணத்திற்கு அபுபக்கரும் ஆபிரஹாமும் ஒரு கடைக்கு துணி
எடுக்க செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்,

அங்கு "இரண்டு சட்டை வாங்கினால் இரண்டு சட்டை இலவசம் " என்று சலுகை விற்பனை செய்கிறார்கள் ,அந்த இடத்தில் சிக்கன படுதுவதிர்காக இந்த இருவரும் இணைந்து ஒரே பில்லில் வாங்கி பயன் பெறலாம் !

ஆபிரஹாம் இடத்தில இஸ்லாத்தில் உள்ள வேறு கொள்கையுடைய முஹம்மது அலிக்கு கூட அது பொருந்தும் .

பேருந்தில் பயணம் செய்யும்பொழுதும் மாற்று கொல்கயுடவருக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை .

2. ஒற்றுமை என்னும் பெயரில் நபியை மீறுதல் ( நபியை மீறுவது மார்க்கத்தை விட்டு வெளிஏறுவதாகும் )

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் புதியதொரு வழிகள் ஏற்படுத்துவதிற்கு தடை

இதனை 24:54 , 4:59 , 6:106 போன்ற வசனங்கள் மூலம் அறியலாம்

நபிக்கு மாறு செய்யகூடிய மக்களை நாம் அதிகமாக பார்க்கிறோம் , மதுஹப் என்னும் பெயரில் அன்று இமாம்கள் தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து இயன்றதை எழுதி இயற்றி விட்டு சென்றுள்ளனர் ஆனால் இன்றோ தவறை சுட்டி காட்டியும் வேற்றுமையில் ஒற்றுமையை கண்டு தங்களுக்குள் மகிழ்ந்து
கொள்கின்றனர்.

நபி ஸல் அவர்கள் சொன்ன செய்தியான செய்தியான " நம்முடைய கட்டளைக்கு மீறி ஒருவன் செய்தால் அது அவனிடம் நிராகரிக்கப்படும் ".

இந்த செய்தியை ஏட்டுசுரகாயாக தூக்கி வைத்து விட்டு அல்லாஹ்விற்கு புகட்டி கொண்டு , இருகின்றனர்

இந்த வசனம் 49:16

அன்று நபி ஸல் வாழ்ந்த காலத்தில் நாட்டுப்புறத்து அரபிகளை பார்த்து இறங்கியது

அது இன்று நமக்கும் பொருந்தும்

"உங்கள் மார்க்கத்தை அல்லாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும்
அறிந்தவன் என்று கூறுவீராக!"

(அல் குர் 'ஆன் 49:16)

3. ஒருவழி தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் .

இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஒரு வழி தான் வழிவகுக்கும் , ஆறுகள் கடல்கள் சங்கமம் போன்றவற்றை எல்லாம் உதாரணம் சொல்ல இயலாது ! இஸ்லாம் மற்ற
போன்று சித்தாந்தங்களை போன்று அல்ல !

எந்த செயலாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் வேதப்படியும் , நபி ஸல் அவர்களின் சொல் செயல்
அங்கீகாரப்படி மட்டும் தான் இருத்தல் வேண்டும் .

33:36 , 3:31 , 8:46 போன்ற வசனங்கள் அதை தான் வலியுறுத்துகின்றன.

முடிவுரை:
--------------------

'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!'

(அல் குர்'ஆன் 42:13)

ஏகத்துவத்தை எதிர்க்கும் எவருக்கும் ஆதரவு தராதீர்கள்!!!
அன்று பரம எதிரிகளான யூத ,நசாராக்கள் தங்களுக்குள் இருந்த பகையை ஒத்திவைத்து விட்டு மற்ற காபிர்களுடன் இணைந்து நபி ஸல் அவர்களையும் சஹாபாக்களையும் எதிர்த்தனர் !

இன்று அதே பாணியில் இஸ்லாத்தின் உள்ளே குர்'ஆன் மற்றும் சுன்னாஹ் தான்
என்பதை மார்க்கம் என்பவர்களை
எதிர்பதற்கு மாற்று கொள்கைகாரர்கள் இணைந்து இருக்கின்றனர்.

அவர்களுக்கும் இவர்களுக்கும் வித்யாசம் என்னவென்றால் அவர்கள் மூசா , ஈசா , இப்ராஹிம் , இஸ்மாயில் , தாவுத் போன்ற நபிமார்களை ஏற்று இணைவைத்து கொண்டு இருந்தனர் , இவர்களோ முஹம்மது நபியையும் ஏற்று அதை செய்துவருகின்றனர் !

நபி ஸல் அவர்கள் இறுதி பேருரையை படிப்பினையாக வைத்து சில குர்'ஆன் ஆயத்துகளுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன் !

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும்
ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர்
உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக்
கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது
அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன்
உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்;
(ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத்
அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால்
1108,1109)

இரண்டை விட்டு செல்கிறேன் அவ்விரண்டையும் நீங்கள் பற்றி
பிடிக்கும் வரை வழிதவரமாட்டீர்கள்

1. அல்லாஹ்வின் வேதம் 2. என்னுடைய வழி

( ஹாகிம் 318)

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்)
தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள்
நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப்
பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி

"இறைவா! இதற்கு நீயே சாட்சி!

இறைவா! இதற்கு நீயே சாட்சி!

இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று
முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

அல்லாஹ்வும் அன்றைய தினமே மார்க்கத்தை நிறைவு செய்துவிட்டான் ! பார்க்க (5:3)

அதற்கு மேல் ஒரு புதிய சட்டமும் இஸ்லாத்தில் கட்டளை இடப்படவில்லை !

இன் ஷா அல்லா நாமும் நபி ஸல் எப்படி சஹாபாக்களுக்கு நபி ஸல் அவர்கள் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ அது போல் ஒற்றுமையாக வாழ்ந்து சுவனப்பதையை நோக்கி பயணம் செய்வோம் .

41:46

யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது
அவருக்கே எதிரானது. உமது இறைவன் அடியாருக்கு அநீதி இழைப்பவனல்லன்.

மேலும் வசனங்களை படித்தும் படிபின்னை பெறவும் .

33:73 , 49:14 , 2:132 , 4:80 , 47:33 , 48:17

அல்லாஹ்வின் தூதரை நாம் மற்ற அனைவரையும் விட நேசித்து
ஒற்றுமையாக வாழ்ந்து இன் ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம் !

"'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள்
அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான)
இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்."(புஹாரி 15)

முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த கட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது
கட்டுரையாளர் :சகோதரர் :  அபுபக்கர் சித்திக்
நன்றி :திண்ணை குழுமம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக