புதன், 24 ஜூலை, 2013

நின்ற லாரி மீது பஸ் மோதல்: பரங்கிப்பேட்டையைய் சார்ந்தவர் உட்பட 15 பேர் படுகாயம்

கடலூர் :சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.
சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் செவ்வாய்க்கிழமை மதியம் வந்துக் கொண்டிருந்தது. கடலூர் சிப்காட் அருகே பச்சையாங்குப்பம் என்ற இடத்தில் சாலையோரத்தில் நிறுத்தி ஐஸ் ஏற்றிக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அரசு பஸ் மோதியது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த பரங்கிப்பேட்டை அப்துல்காதர், வண்டிப்பாளையம் ஜெயராமன், திருக்கோவிலூர் சுபா, வேல்விழி, நடத்துநர் முருகையன் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை செய்து வரு
கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக