கிளை பொருளாளர் பாஷா அவர்கள் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.
1.தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தினால் வருகின்ற நாடளுமண்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு அதிமுக-விற்க்கே என்று இப்பொதுக்கூட்டம் அறிவிக்கின்றது.
2.பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் பெண்களின் மார்க்க கடமையான முக்காடு (ஹிஜாப்) அணிவதற்கு உடனே
தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
3.பேருந்து நிலையும் மற்றும் வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனே அகற்றும்மாறு இப்பொக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
4.கடலூர் O.T. பஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தில் நிறுத்தாமல் செல்வதால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் போக்குவரத்துறை உடனே நடவடிக்கை எடுக்கமாறு இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
5.சின்னதெரு முனையில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயால் போக்குவரத்து மிகவும் சிரமாகயுள்ளது. இதனை கவணத்தில் கொண்டு கால்வாய் பணியை விரைந்து முடிக்ககுமாறு பேரூராட்சியை இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
6.25 வருடகளாக வசூல் செய்துவரும் பெரிய மதகு பாலம் வசூலை ரத்து செய்யும்மாறு பேரூராட்சியை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
6.TNTJ வழங்கும் "இதுதான் இஸ்லாம்" நிகழ்ச்சி மெகா 24 சேனலில் தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பார்த்து பயடையும் வகையில் மெகா 24 சேலை உடனடியாக பரங்கிப்பேட்டை பகுதியில் ஒளிபரப்புமாறு கேபிள் டிவி ஆப்ரோட்டர்களை இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
7.நம் கண்முன்னே வாழ்ந்து மரணித்த ஒருவருக்கு கொடியேற்றுதல், சந்தணம் பூசுதல் மற்றும் கந்தூரி விழா எடுத்தல் போன்ற ஷிர்க்கான காரியத்தை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் சிந்தனையயை தூண்டும் விதமாக இருபுறமும் சமூக தீமைகளான மது, புகையிலைகளுக்கு எதிராகவும், வரதட்சனை மற்றும் சிந்திக்க தூண்டும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய பேணர்கள் வைப்பட்டுயிருந்தது. இப்பொதுக்கூட்டதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
நன்றி :TNTJPNO










0 கருத்துகள்:
கருத்துரையிடுக