வியாழன், 20 ஜூன், 2013

தடைகாலத்திற்கு பிறகு 200 டன் மத்தி மீன்கள் பரங்கிப்பேட்டை மீனவர்கள் மகிழ்ச்சி.

பரங்கிப்பேட்டை :தடைகாலத்திற்கு பிறகு முதன்முறையாக பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் 200 டன் மத்தி மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதன்படி, பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, மடவாபள்ளம், சாமியார்பேட்டை, குமாரப்பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம், கிள்ளை, எம்.ஜி.ஆர்.திட்டு, முழுக்குதுறை, முடசல்ஓடை உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட மீன கிராம மக்கள் தங்களின் படகுகள் மூலம் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு, பரங்கிப்பேட்டை பகுதியில் மீனவர்கள் வலையில் சரியாக மீன்கள் கிடைக்க வில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் 30–க்கும் படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர்.

அங்கு மீனவர்கள் வீசிய வலையில் இதுவரை கிடைக்காத வகையில் 200 டன் மத்திகள் சிக்கியது. இந்த மீன்களை கடற்கரைக்கு கொண்டு வந்து அங்கு தயாராக இருந்த கேரளா, கர்நாடகா பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். ஒரு படகின் மத்தி மீன்களின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஏலம் போனது. மத்தி மீன்கள் 200 டன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக