வியாழன், 20 ஜூன், 2013

கடலூர் கடலோர பகுதிகளில் 356 கோடி செலவில் கேபிள் மூலம் மின்சாரம்

கடலூர், : கடலூர் கடற்கரை பகுதியில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.
கடலூரில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக் குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கி னார். ஊராட்சி செயலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் டாக்டர். சண்முகசுந்தரம், சுந்தரி முருகன், செல்வராஜ், மல்லிகா கமலக்கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கடலூர் கந்தன், நல்லூர்பாளையம் கந்தன், அழகானந்தம், தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தானே சிறப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் அருள்காந்தி பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து தாக்கம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ரூ. 356 கோடி செலவில் கடலூர் கடற்கரை பகுதி யில் கேபிள் மூலம் மின் சாரம் வழங்கும் பணியை தொடங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணிகள் தற் பொழுது டெண்டர் விடும் நிலையில் உள்ளது. விரை வில் பணிகள் தொடங்கப்பட்டு நான்கரை ஆண் டில் முடிவடையும். பின்னர் கடலூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக