மும்பை :GPI எனப்படும் உலக சமாதான குறியீட்டினால் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்ட 2013 ஆண்டுக்கான வன்முறைகள் அதிகம் நிகழும் நாடுகள் எவை என்ற கருத்துக் கணிப்பில் முன்னணியில் இருக்கும் முதல் 25 நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது.
சுமார் 162 நாடுகளில் அதிக சமாதானம் நிறைந்த நாடுகளின் தர வரிசையில் கடைசி 25 நாடுகளுக்குள் 141 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது அதிர்ச்சியளிக்கத் தக்கதே ஆகும்.
இதில் திடீர் பின்னடைவு ஏற்படக் காரணமாக வட இந்தியாவின் பஸ்டார் நகரில் சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட்டுக்களின் வன்முறையில் 28 பேர் கொல்லப் பட்ட சம்பவம் அமைந்துள்ளது. இக்கருத்துக் கணிப்பின் படி இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்குக் குறைந்தது 2 பேருக்கும் அதிகமாக வன்முறைகளால் கொல்லப் பட்டு வருவதாகவும் (இயற்கை மரணம் தவிர்த்து) 2012 ஆம் ஆண்டு மட்டும் உள்நாட்டு வன்முறைகளால் 799 முக்கிய மக்கள் கொல்லப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இப்பட்டியலில் இந்தியாவுக்குக் கீழே பாகிஸ்தான், ஈராக், தென் சூடான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அமைந்துள்ளன. 2012 ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த சமாதானமான நாடாக ஐஸ்லாந்து தெரிவு செய்யப் பட்ட அதேவேளை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மிக அதிக வன்முறைகள் நடைபெறும் நாடாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா 2011 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக