பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் (07/06/2013)இன்று (வெள்ளிக்கிழமை)வாத்தியப்பள்ளி மைதானத்தில் திட்டமிட்டப்படி துவங்கியது மவ்லவி
அப்துல் காதிர் மரைக்காயர் உமரி கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். இஸ்லாமிய ஐக்கிய
ஜமாத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார் செயல் தலைவர் ஹாஜி M.S முஹம்மது யூனுஸ் அவர்களின் முன்னிலை வகித்தார் பைதுல் மால் கமீட்டி பொது செயலாளர் S.S.அலாவுதீன் உட்பட சிலர் கால்பந்தாட்ட போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது
(ஜூன் 9) வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் சிறப்பாக செய்து உள்ளனர் .முன்னதாக விளையாட்டு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

படங்கள் :ஹமீது ரிஸ்வான்
























0 கருத்துகள்:
கருத்துரையிடுக