பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் முதல் முறையாக நடைபெறும் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் (07/06/2013)நாளை (வெள்ளிக்கிழமை)வாத்தியப்பள்ளி மைதானத்தில் துவங்க இருக்கின்றது இதற்க்கான ஏற்படுகள் தயார் நிலையில் உள்ளது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இப்போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் (ஜூன் 7,8,9)என நடைபெற இருக்கிறது இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். நிறைவு நாளான வருகின்ற (09/06/2013)ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகின்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றுகின்றனர் அதற்கான பிரசுரம் கிழே காணலாம்












0 கருத்துகள்:
கருத்துரையிடுக