
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது.
1. நிதி நிலை , கணக்குகள் , சாந்த வரவு பதிவு செய்யப்பட்டது.
2. இந்த ஆண்டிற்கான கல்வி உதவி நிதி ரூபாய் 50,000 ஒதுக்கீடு செய்து , ஜமாத்திலிருந்து கோரிக்கைவரும் போது அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. ஜமாத்திலிருந்து வந்திருந்த திருமண உதவிக்கான மனு ஒப்புதல் செய்து அதற்கான நிதி 4,000 ருபாய் ஜமாத்திற்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.
4. ரமளான் மாதத்திற்கான பித்ரா வசூல் செய்ய பொறுப்பாளிகளை அடுத்த மாத கூட்டத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்றும், ரமலான் மாத கடைசி வாரத்தில் பித்ராவை சேகரிக்கும் முகமாக இப்தாருடன் கூடிய கூட்டம் ஒனறும் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
5. தற்போது குழுமங்களில் வைக்கப்படும் கோரிக்கையான பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வாங்கப்படுவதை ஜமாஅத் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு மனு அளிக்க கோரி கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
6. ஜமாத்திலிருந்து புதிய ஆம்புலன்ஸ் வாங்க நிதி உதவி கோரி வந்த மனுவை அமைப்பின் நிதியிலிருந்து இது போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்திட வகை இல்லாததால், இந்த பகுதி ஊர் மக்களிடம் ஜமாஅத் உடைய கோரிக்கையை முன்வைத்து பொது வசூல் செய்து அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பொறுப்புதாரியாக ஜமாஅத் தொடர்பாளர் ஜெய்னுள்ளாபிதீனை(ஜெய்லா ) நியமிக்கப்பட்டது.
source:nripno group
0 கருத்துகள்:
கருத்துரையிடுக