
தமிழக அமைச்சரவையில் இன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் சி.த.செல்லபாபண்டியன், முகமது ஜான்
விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களாக எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சண்முகநாதனுக்கு சுற்றுலாத்துறையும், அப்துல் ரகீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பி. செந்தூர் பாண்டியனுக்கு இந்து அறநிலையத்துறையும், எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வனத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த பச்சைமாலுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பரிந்துறையின் பேரில் கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலாகா மாற்றம்:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சராக எஸ்.பி., சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கே.டி.பச்சமால் நியமிக்கப்படுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக