
பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 38; லாரி உரிமையாளர். கடந்த 8ம் தேதி லாரி நெய்வேலிக்கு வாடகைக்கு சென்று விட்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவு 1:00 மணியளவில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க போராடியும் முடியவில்லை.
தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இருந்தும் லாரியின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிந்து லாரிக்கு தீவைத்த மர்ம நபர்களை தேடிவருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக