திங்கள், 10 ஜூன், 2013

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்தும் பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு, பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகளை பள்ளி வேலை முடிந்ததும் இன்று மாலையிலேயே வழங்க வேண்டும். வரும் 14ம் தேதி வாரத்தேர்வு நடத்த வேண்டும்.
கற்பித்தல் பணியை இன்றே துவங்க வேண்டும்.சுகாதாரப் பணிகள், கழிவறை சுத்தம் செய்தல், குடிநீர் தொட்டிகளை பராமரித்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாõரி ஜோசப் அந்தோணிராஜ் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக