புதுக்கோட்டை:புதுக்கோட்டை
அருகே இன்று காலை நடந்த கோர சாலை விபத்தில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இதுபற்றி கூறப் படுவதாவது:
இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கைக்குறிச்சி மற்றும் விஜயரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் தங்கள் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் செல்லும் பேருந்து தாமதமானதால் அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி பால்வேன் ஒன்று சென்றது. அதனை நிறுத்திய மாணவர்கள் தங்களை பள்ளியில் இறக்கிவிடுமாறு கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் வல்லநாடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிவந்த பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாணவர்கள் ராஜேஸ்குமார்,மணிகண்டன், சிவக்குமார், மதியழகன்,சசிகுமார், விஷ்ணு,உதன்குமார் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
3 பேர் கவலைக்கிடமகா உள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக