புதன், 19 ஜூன், 2013

வட மாநிலங்களில் கடும் மழை வெள்ளம் :உயிரிழப்பு 131 ஆக உயர்வு

புதுடெல்லி:வடக்கு-இந்தியாவில் மோசமான மழைவெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களிலும் மழைவெள்ளம், மண்சரிவில் ஏனையோர் உயிரழந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரிய கட்டிடங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டுச் சென்றுள்ளன. பல வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல்போயுள்ளன.
அந்தப் பகுதியில் கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி  யாத்திரை மேற்கொண்டிருந்த  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள்  வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
மழைவெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உத்தர்காண்ட் மாநிலத்தில் பல ஆறுகள் கரை-உடைப்பெடுத்துள்ளன.
வழமையாக ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தப் பகுதிகளில் பெய்யும் பருவமழையால் விவசாய அறுவடைகள் நாசமடைகின்றன.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் அடைமழை பெய்துவருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக