திங்கள், 17 ஜூன், 2013

பரங்கிப்பேட்டையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை
 பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவரும் ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ்  பேரணியை துவக்கி வைத்தார்.மழைநீர் சேமிப்புத் திட்டம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பள்ளி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர் மழைநீரை சேகரிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் அமைக்க வலியுறுத்தினர் இதில் பேரூராட்சி து.தலைவர் நடராஜன், செயல்அலுவலர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

 
                                                                                                                                படங்கள்: முத்துராஜா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக