திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நோன்பு பெருநாள்: பரங்கிப்பேட்டை TNTJ திடல் தொழுகை!

பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழகை மர்கஸ் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து A. யூசுப் அலி குத்பா உரை நிகழ்த்தினார். தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட லாயிலாஹா இல்லல்லாஹ் என்கிற தலைப்பில் உரையாற்றியபோது, மார்க்கத்தின் 5 முக்கிய கடைமைகளில் ஓரிறை வழிபாடாகிய லாயிலாஹா இல்லல்லாஹ் சரியாக இல்லையெனில் மற்ற கடமைகள் சரியாக நிறைவேற்றினாலும் நமது அனைத்து நல்ல அமல்ககளும் வீணாகிவிடுகிறது என்று எடுத்து கூறினார். இதில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்தக் கொண்டனர்





நன்றி:படங்கள்.MYPNO.COM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக