திங்கள், 20 ஆகஸ்ட், 2012

1433 / 2012 பரங்கிப்பேட்டை ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை! (படங்கள்)

பரங்கிப்பேட்டை: ஹிஜ்ரி 1433 (2012) ஆண்டின் ரமலான் மாதம் நேற்ற நிறைவடைந்ததையொட்டி, இன்று பரங்கிப்பேட்டையில் சந்தோஷம், உற்சாகம், மகிழ்ச்சி, குதூகலத்துடன் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இன்று காலை 8.30 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை மவ்லவி கபீர் அஹமது மதனி தலைமையில் நடைபெற்றது.


மஹ்மூதியா ஷாதி மஹாலிலும் ஹாஜி B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலிலும் பெண்களுக்காக தனி இடம் வசதி செய்யப்பட்டிருந்தது. பெண்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்ததால் மஹ்மூதியா ஷாதி மஹால் உள் நுழைவாயில் முன்பாகவும் பெண்கள் தொழுகை நடத்தினார்கள்.

அதிகமான வருகைகளினால் ஆண்கள் சாலையிலும் தமது தொழுகைகளை நிறைவேற்றினர்.

குடும்ப அங்கத்தினர்கள் பலரும் பணி / தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் இருப்பதின் காரணமாக இந்த சந்தோஷ தருணத்தில் அவரவர் குடும்பத்துடன் இல்லை என்ற வருத்தம் மேலிட்ட போதிலும் இவை யாவும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாதவை என்ற நிதர்சனமும் உணரப்பட்டிருந்தது.











 நன்றி :MYPNO.COM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக