
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனா, அவரது மகள், வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஒக்லு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மியான்மரில்
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
துருக்கி பிரதமர் என்ற நிலையில் பர்மா அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய தேவையான தீர்வுகள் ஏற்பட பாடுபடுவோம் என எர்துகான் அறிவித்தார்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
துருக்கியில் இருந்து விமானத்தில் உணவுப்பொருட்கள், மருந்துகள், ஊட்டச்சத்துப் பொருட்களையும் கொண்டுவந்தனர். 3 தினங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எர்துகானின் மனைவி அமீனாவும், அமைச்சர் தாவூத் ஓக்லுவும் அகதி முகாம்கள், முஸ்லிம் ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு சென்றனர். அங்குள்ள மக்களின் துயரங்களையும், கவலைகளையும் கேட்டறிந்து ஆறுதல் கூறினர். இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் கிடைக்க முயற்சிப்போம் என துருக்கி அறிவித்துள்ளது.

முன்னர் சோமாலியாவுக்கு எர்துகானும், அவரது மனைவியும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக