பரங்கிப்பேட்டை: "எங்க ஊர்ல ஆறு மணி நேரம்... உங்க ஊர்ல...?" என்று கிண்டலும்
நகைப்புமாய் பேசிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது எத்தனை மணி நேரம் மின்வெட்டு
என்று யாருக்கும் புரியாத நிலை. பரங்கிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக
அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரத்தினால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எப்போது வரும்? எப்போதுபோகும்? என்று புரியாத நிலையில் தினம்
தினம் இந்த மின்வெட்டு பிரச்சினைக்கு ஆளாகியிருக்கும் பரங்கிப்பேட்டை பொதுமக்களின்
அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
அதுவும் குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் தடைபடகிறது.
மேலும் ரமளான் மாத நோன்பையொட்டி சஹர் நேரப்பொழுதுகளில் எழுந்து பணிகளை
மேற்கொள்ளும்போது 4 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் தடைபடுகிறது. அது
மட்டுமின்றி, காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3
மணி வரையிலும் என அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மிகவும் சிரமத்திற்கு
ஆளாகியுள்ளனர்.
நன்றி : mypno.com








0 கருத்துகள்:
கருத்துரையிடுக