புதன், 8 ஆகஸ்ட், 2012

பழமைவாய்ந்த கிலுர்நபி பள்ளி குளம் தூர்! (படங்கள்)

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகரின் முக்கிய நீர் நிலைகளாக குளங்கள் திகழ்கின்றன. அந்த வகையில் பரங்கிப்பேட்டை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுடன் இணைந்தவாறு குளங்கள் அமைந்துள்ளன. இவை முக்கிய நீர் நிலைகளாக மட்டுமின்றி தற்காப்பு, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகளுக்கு முக்கிய ஆதாரமாய் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளங்கள் முறையாக பராமரிக்கப்படாததினால் குளிப்பதற்கு உகந்த சூழ்நிலையை இழந்து வருகிறது. மழைகாலங்களில் மட்டும் சில இளைஞர்கள் மீராப்பள்ளி மற்றும் புதுப்பள்ளி குளத்தில் குளித்து விளையாடி செல்கின்றனர்.

இதனால் புதிய தலைமுறையினர் குளங்களில் குளிக்க முற்படுவதில்லை. மேலும் இவர்களுக்கு நீச்சல் என்கிற மிகச்சிறந்த உடற்பயிற்சியும் தற்காப்பு கலையும் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது.
ஆகையினால் இதுபோன்ற பொதுக் குளங்களை தூர் வார வேண்டும் என்று பலராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது பழமை வாய்ந்த கிலுர் நபி பள்ளி குளத்தில் தூர் எடுக்கும் பணி படு ஜோராக நடைபெற்று வருகிறது. குளத்தில் இருக்கும்பாசி படர்ந்த-சேர் நிறைந்த தண்ணீரை அகற்றி பொக்லைன் கொண்டு குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.




இதில் சில தன்னார்வ இளைஞர்களும் இணைந்து இந்த தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி, விரைவில் மிராப்பள்ளி குளத்திலும் தூர் வாரும் பணி இந்த ஆண்டிலோ அடுத்த ஆண்டிலோ தொடங்கும் என நம்பதகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

 நன்றி: mypno.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக