புதன், 8 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை அருகே உறவினர் வீட்டில் டி.வி. பார்த்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

பரங்கிப்பேட்டை ;பரங்கிப்பேட்டை  அருகே உள்ள கிள்ளை தைக்கால் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 25). விவசாயி. நேற்று இவர், பரங்கிப்பேட்டையை அடுத்த சில்லாங்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு இரவில் டி.வி. பார்த்து கொண்டிருந்தபோது திடீரென தொலைக்காட்சியில் படம் தெரியவில்லை.
எனவே அவர், டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கேபிள் வயரை கழற்றியபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்த சிவாவின் மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்  பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக