பரங்கிப்பேட்டை; விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் ,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த 04-08-2012 சனிக்கிழமை மாலை பரங்கிபேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் விடுதலை சிறுத்தை கட்சியினரால் ஏற்ப்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, முன்னிலை வகித்த இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் .S. நூர் முஹம்மது அவர்கள் உரையாற்றியபோது இரண்டு கோரிக்கைகளை வலியுருத்தி பேசினார்
முதல் கோரிக்கையாக பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து பாடம் பயில கல்வித்துறையிடம் அனுமதி வாங்கித்தருமாரும் ,
இரண்டாவது கோரிக்கையாக பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தில் திருச்செந்தூர் - சென்னை - திருசெந்தூர் செல்லும் விரைவு இரயில் வண்டியை அனைத்துமக்களுக்கும் பயனளிக்கும்வகையில்,
இரண்டு நிமிடம் நின்று செல்ல ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டதோடு,கோரிக்கை மனுவையும் நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்தார் .
இறுதியாக பேசிய தொல் .திருமாவளவன் அவர்கள் ,பசியைப்பற்றியும் ,நோன்பினால்கிடைக்கும் மனவலிமை ,உடலவலிமைபற்றியும் சிறப்பாக பேசினார் .அடுத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக