
கொத்தட்டை ஊராட்சித் தலைவர் நாகராஜன், மா,கம்யூ., பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் கற்பனைச்செல்வன் முன்னிலை வகித் தனர். கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்பாபு வரவேற்றார்.
சிதம்பரம் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில், "ஏழை மக்கள் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்ட பட்டா கேட்டால் அரசு தர மறுக்கிறது. தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் நிலங்களை உடன் வழங்குகிறது. தனியார் அனல் மின் நிலைய நிறுவனம் குண்டர்களை வைத்து ஏழைகளை மிரட்டி நிலங்களை அபகரிக்கிறது. அவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு போட்டு கைது செய்ய வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதியில் 25 கி.மீ., தொலைவிற்கு மேல் தான் கம்பெனிகளுக்கு அனுமதி தரவேண்டும் என்ற விதி இருக்கும் போது 8 கி.மீ., தொலைவில் மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனம் வந்தால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுவோம்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக