புதன், 22 ஆகஸ்ட், 2012

சிமென்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள் உண்ணாவிரதம்

கடலூர் : கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கம், அகில இந்திய கட்டுனர் சங்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுனர் சங்கங்கள் சார்பில் கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.சிமென்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டித்தும், சிமென்ட் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை அரசிடமிருந்து மானிய விலையில் பெற்று வரும் ஆலை உரிமையாளர்கள், சிமென்ட் விலையை எவ்வித வரையறையின்றி விலையை உயர்த்தி வருகின்றனர். இதனைக் கண்டித்தும், சிமென்ட் விலையை கட்டுப்படுத்திட ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடந்ததுகடலூரில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுனர் சங்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுனர் சங்க நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக