செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

லால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

 லால்பேட்டை:லால்பேட்டை மினாதெருவில் இருக்கும் சைலப்பை அப்துல் ரவூப் மகன் ஃபவ்ஜுல் அமீன்,மேலத் தெருவில் இருக்கும் கோஸ் அமானுல்லாஹ்வின் மகன் முஹம்மது ஃபஹத் ஆகிய இருவரும் நேற்று  மாலை   மோட்டார் சைக்கிளில் லால்பேட்டை அருகில் உள்ள திருச்சின்னபுரத்தில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றோர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் ஃபவ்ஜுல் அமீன் (வயது18) சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் முஹம்மது ஃபஹது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக  சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
பலியான மாணவருக்கு 10 தினங்களுக்கு முன்தான் பைக் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த பைக்கில் தான் அவர் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிட தக்கது.
தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் மகிழ்ச்சியான தினங்களில் நடப்பது அனைவரையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கி விடுகிறது.எதிர் காலங்களில் நமது இளைஞர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மிகுந்த கவனத்துடன் பயணம் செய்வது ஒன்றே இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வழி செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக