வியாழன், 16 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை யில் சுதந்திர தின விழா



பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டையில் 66வது சுதந்திர தினவிழாவையொட்டி பரங்கிப்பேட்டை பேரூராட்சி   அலுவளகத்தில் தலைவர் முஹம்மது  யூனுஸ் தேசிய கொடி ஏற்றி வைத்தர்
மற்றும் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் கிரசண்ட் நலவாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ்.நூர் முஹமது தலைமையேற்று தேசியகொடி. ஏற்றி வைத்தர்
பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் அசோகன்தேசிய கொடி ஏற்றி வைத்தர்

பரங்கிப்பேட்டைபோலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா ஷா தேசிய  கொடி ஏற்றி வைத்தர்

அதபோல் பள்ளி களில் நடைபெற்ற சுதந்திர தினவிழா வில் பள்ளி யின் தலைமை ஆசிரியர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்
அரசினர் ஆண்கள் பள்ளி மற்றும் மகளிர் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கலிமா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாணவ-மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சுதந்திரதினம்கொண்டாடப்பட்டது.

மூனா ஆஸ்திரேலியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹமது யுனூஸ் தேசியகொடியேற்றினார். பரங்கிப்பேட்டை மனிதநேய இலவச கல்வி மையத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் நிர்வாக இயக்குநர் கா.மு. கவுஸ் கொடியேற்றி வைத்தார்.

நன்றி 
படங்கள் : MYPNO.COM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக