பரங்கிப்பேட்டை: கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள்கிழமை (ஆக.6) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து போராட்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் 3 அனல் மின்நிலையங்கள், ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, சாயக்கழிவு தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 3 துறைமுகங்கள் கடலூர் முதுநகர் தொடங்கி பரங்கிப்பேட்டை வரை அமைக்கப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதனை எதிர்த்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, வரும் திங்கள்கிழமை (ஆக.6) சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.








இன்ஷாஅல்லாஹ் இந்த போராட்டம் வெற்றி அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம். யாரும் பொட்டி!!! வாங்க இந்த போராட்டத்தை நடத்தாமல் உண்மையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடத்தினால் மிக்க சந்தோசம்.
பதிலளிநீக்குஇது போல் எழுத காரணம் இபோ இப்பகுதியில் இது பொழப்பா நடக்குது. இவர்கள் கேஸ் இட்டு ஸ்டே வாங்குவார்கள் அவர்கள் (பாக்டரி உரிமையாளர்கள்) உடனடியாக கேஸ் இடவரின் டிமான்ட் என்ன என்று தூது அனுப்புவார் எல்லாம் ஒகே ஆனவுடன் யாருக்கும் தெரியாமல் கேஸ் வாபஸ் பெறப்படும், ஏன் என்றால் நமது நாடு ஜனநாயக நாடு.
எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமாணவன்.