சனி, 4 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை அருகே மாணவரைத் தாக்கிய 26 பேருக்கு வலை

பரங்கிப்பேட்டை : பிளஸ் 1 மாணவரைத் தாக்கிய சக மாணவர்கள் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரசாந்த், 16, பு.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பள்ளி பிளஸ் 2 மாணவர்
ஆனந்தராஜ். இருவருக்குமிடையே கடந்த 30ம் தேதி அரசு டவுன் பஸ்சில் ஏறும் போது தகராறு ஏற்பட்டது.மறுநாள் 31ம் தேதி பிரசாந்த் வெளியாட்கள் நான்கு பேருடன் பள்ளிக்குச் சென்று ஆனந்தராஜை மிரட்டினார்.தலைமை ஆசிரியர் இருவரையும் கண்டித்து சமாதானம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி பிரசாந்த் தனது தந்தை ராஜேந்திரன் மற்றும் நான்கு பேருடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை பார்த்து விட்டு பு.முட்லூர் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது ஆனந்தராஜியுடன் சக மாணவர்கள் 20 பேர் சேர்ந்து பிரசாந்த்தை தாக்கினர். இதில் காயமடைந்த பிரசாந்த் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 26 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக