ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது

பரங்கிப்பேட்டை : சப் இன்ஸ்பெக்டரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கொத்தட்டை அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பதிவெண் இல்லாத பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்ற ஆனையாங்குப்பத்தை சேர்ந்த ராமஜெயத்தை நிறுத்தி போலீசார்
ஆவணங்கள் கேட்டதால் தகராறு செய்தார்.
இதனால் அவரை போலீசார் அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் ராமஜெயம் கிராமத்திற்கு சென்று 5 பேருடன் பைக்கில் சென்று சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்தை தகாத வார்த்தையால் திட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்து துரைசிங்கம் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கலிமுல்லா ஷா வழக்கு பதிந்து திருநாவுக்கரசை, 27, கைது செய்தனர். ராமஜெயம், பழனிவேல், அருள், முருகன், இளையராஜா ஆகியோரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக