அல் ஐன் : ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் அல் ஐன் நகரிலுள்ள வணிக வளாகம்
சார்பாக நடத்தப்பட்ட குலுக்கல் போட்டியில் இந்தியரான சோபி அப்துல்லாவுக்கு 2,45,028
அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள லம்போர்கினி கல்லர்டோ கார் பரிசாகக் கிடைத்துள்ளது.
சோபி துபாயில் வாடகை வண்டி ஒன்றின் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார்.
'ஷாப் அன்ட் வின்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் அந்த வணிக
வளாகத்தில் குறிப்பிட்ட அளவுக்கு பொருள்கள் வாங்கிய சுமார் 2.5 லட்சம்
வாடிக்கையாளர்களின் பெயர்கள் முதலில் பதிவு செய்யப்பட்டன. பின்னர், பதிவு
செய்யப்பட்ட பெயர்களில் பரிசுக்குரிய நபரை குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளனர்.
அப்போது இந்தியரான சோபி அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, காரைப் பரிசாக
வென்றுள்ளார்.
லம்போர்கினி கல்லர்டோ கார், 323 கி.மீ வேகம் வரை செல்லும் திறனுடையதாகும்.
V-10 ரக எஞ்சினைக் கொண்ட இந்தக் கார், புறப்பட்ட 7-வது வினாடியிலேயே 160 கி.மீ
வேகத்தை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக