பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக கடும் மின்வெட்டு
ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் மின்சாரம், ஒரு மணி நேரம் மின்வெட்டு என நேற்று இரவு
கொசுக்கடியாலும் புழுக்கத்தாலும் பொதுமக்கள் இரவு பொழுதினை கழித்தனர். பகல்
பொழுதில் 6 மணிநேரமும், இரவுப் பொழுதில் 6 மணிநேரமும் மின்வினியோகம் தடைபடவதினால்
பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக காற்றாலை மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு குறைந்த நிலையில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மணி நேரம் மின்வெட்டு இருக்குமென தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்திருந்த நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது 10 மணி நேரத்திற்கும் மேலாக நிலவும் மின்வெட்டு காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இரவு நேர மின்வெட்டு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்புக்கு மாறாக, மீண்டும் கடந்த மார்ச்,ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் செய்யப்பட்டதைப்போன்றே, இரவு நேரத்தில் வரைமுறை இல்லாமல் மாலை 7 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நான்கைந்து முறை மின்வெட்டு செய்யப்படுகிறது.பின்னர் காலை 6 மணியிலிருந்தும் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
காலையில் 3 மணி நேரம், பிற்பகலில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பகலில்தான் இந்தக் கொடுமை என்றால், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மின் சப்ளை, ஒரு மணி நேரம் மின் தடை என மாறி மாறி கண்ணாமூச்சி காட்டத் தொடங்கிவிட்டது. இதனால், இரவில் தூங்க முடியாமல் பெண்களும் குழந்தைகளும் அவதிப்பட்டனர்.
இதனால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 வாரத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடர் மின்வெட்டால் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக