கடலூர்;புதுவையில் இருந்து கடலூருக்கு நேற்று மாலை தனியார்
பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சை புதுவையை சேர்ந்த டிரைவர் முத்துக்குமரன்
(வயது 26) ஓட்டிச்சென்றார். அவர் அதிக குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டி சென்றார். பஸ்சை மெதுவாக ஓட்டும்படி பயணிகள் கூறினார்கள். ஆனால் அவர் கேட்வில்லை. தொடர்ந்து பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டனர். செம்மண்டலம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது அதிகமான பயணிகள் பயத்தில் கீழே இறங்கி ஓடிவிட்டனர். பின்னர் செல்போனில் புதுநகர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு டிரைவர் குடிபோதையில் பஸ்சை ஓட்டிவருவதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து போலீசார் வாக்கிடாக்கி மூலம் தலைமை தபால்நிலையம் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமை தபால் சிக்னல் அருகே போக்கு வரத்து போலீசார் அந்தபஸ்சை வழிமடக்கி டிரைவரை கீழே இறக்கினார்கள். ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவரை அடிக்க முயன்றனர். இதை பார்த்ததும் கண்டக்டர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பஸ்சை ஓட்டிவந்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். இது தொடர்பாக டிரைவர் முத்துகுமரன் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேல் விசாரணைக்காக புதுநகர் போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பஸ் டிரைவர் முத்துக்குரனின் டிரைவிங் லைசென்னை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக