பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்து
அச்சுறுத்திய சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.பரங்கிப்பேட்டை
தெத்துக்கடை தெருவைச் சேர்ந்தவர் தாஜிதீன். இவரது வீட்டிற்குள் நேற்று ஆறு அடி
நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே
ஓடிவந்து விட்டனர்.தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜன் தலைமையில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக