சனி, 21 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டையில் நோன்பு துவங்கியது!

பரங்கிப்பேட்டை: இன்று புனித ரமலான் நோன்பு நோற்க ஆயாத்தாமாகி கொண்டிருந்த நிலையில் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் . இந்நிலையில் இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி கூறினார் .
இதைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை இரவு 8 மணிக்கு அனைத்து பள்ளிவாசல்களிலும் ரமலான் நோன்பின் ஆரம்பத்திற்கு அறிவிப்பாக தக்பீர் கூறப்பட்டது. இஷா தொழுகைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளிலும் தராவீஹ் தொழுகை நடைபெற்று வருகிறது.
நன்றி ; mypno.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக