பரங்கிப்பேட்டை தவ்லத்துன்னிஸா அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மதினா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 28 மாணவிகளுக்கு "முபள்ளிகா" பட்டம் வழங்கப்பட்டது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மதினாப்பள்ளியிலும் பெண்கள் மதரஸா கட்டிடத்திலும் அமர்ந்து உரைகளைக் கேட்டனர்.
ஜமாஅத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், பொது செயலாளர், செயலாளர் பைத்துல்மால் நிர்வாகிகள் என்று அனைவரும் கலந்துக் கொண்டனர்.
ஜமாஅத் பொருளாளர் தனது உரையில் குர்ஆன் ஹதீஸ் கல்வியின் அவசியத்தைப் பேசினார்.
ஜமாஅத்தின் துணைத் தலைவரும், தவ்லத் நிஸா பள்ளியின் நிர்வாகியுமான சகோ செய்யது ஆரிப் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் உரையாற்றினர். சிங்கையிலிருந்து சகோ அலாவுத்தீன் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாமல் போனாலும், அவர்களின் எண்ணங்களை பள்ளியின் ஆசிரியர் உரையாக தொகுத்து வழங்கினார். அதில் ஒற்றுமை - குறிப்பாக தாய் தந்தையை அரவணைத்து வாழ்வது குறித்து எடுத்துரைத்தார்.
மீராபள்ளி இமாம் கல்வியின் அவசியத்தையும், கல்வி கற்பதற்காக கடந்தக்கால அறிஞர்கள் பட்ட கஸ்டங்களையும் எடுத்துச் சொன்னார்.
அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி ரபீக் ஹாஜியார் அவர்கள் ஈமானுடன் வாழ வேண்டிய அவசியத்தை உருக்கமாக பேசினார்.
கடைசியில் பேசிய சகோதரர் (பெயர் தெரியவில்லை) தமிழகத்தில் 6000 பள்ளிவாசல்கள் கிட்டத்தட்ட உள்ளன. அவற்றோடு மாதிரி மதரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தையும், பட்டம் பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் மாணவிகள் கற்ற கல்வியை நடைமுறைப்படுத்த கூடிய சூழநிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.
நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.
நன்றி ; PNO ISLAMIC JAMAATH
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக