கடலூர் : கடலூர் பஸ் நிலையத்தில் மாற்றுத் திறாளியிடம் செயினை
பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.வடலூர் அடுத்த ரோடு மருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல், 37; கொத்தனார். மாற்றுத் திறனாளியான இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக கடலூர் வந்தார்.
மாலை ஊருக்குச் செல்ல விருத்தாசலம் பஸ்சில் ஏறினார்.
அப்போது இவரது பின்னால் வந்த வாலிபர், ஞானவேல் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதனைப் பார்த்த சக பயணிகள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கடலூர் முதுநகர் அடுத்த சாலக்கரையைச் சேர்ந்த சதீஷ்குமார், 24, என்பது தெரியவந்தது. வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக