திங்கள், 9 ஜூலை, 2012

நெல்லிக்குப்பத்தில் கடை சுவரில் துளைபோட்டு ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை



நெல்லிக்குப்பத்தில்
கடை சுவரில் துளைபோட்டு ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளைநெல்லிக்குப்பம் ;கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). இவர் நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் நகைக்கடை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அடகு கடையின் பின்பக்க சுவரில் துனை போட்டு உள்ளே நுழைந்தனர்.

கடையில் இருந்த லாக்கரை கியாஸ் சிலின்டரை கொண்டு வெல்டிங் எந்திரம் மூலம் உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் அங்குள்ள மேஜை டிராயரை உடைத்து அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 15 பவுன் நகை ஆகியவைகளை கொள்ளையடித்தனர்.

இதையடுத்து ஷோ-கேஸ் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த 5 கிலோ வெள்ளி பொருள்களை அள்ளிக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இன்று காலை கடையை திறந்த சீனிவாசன் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

லாக்கரை உடைக்க முடியாததால் லட்சகணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை தப்பியது தெரிய வந்தது. கடையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அதை காணவில்லை. கொள்ளையர்கள் அதை உடைத்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுனர்கள் அங்கு விரைந்து வந்தனர். லாக்கரை உடைக்க கியாஸ் சிலின்டரை பயன்படுத்தி இருப்பதால் கொள்ளையர்கள் வடநாட்டு வாலிபர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக