வெள்ளி, 20 ஜூலை, 2012

வளைகுடா நாடுகளில் ரமழான் நோன்பு துவங்கியது

துபாய்; வளைகுடா நாடுகளில் 20.07.2012 வெள்ளிக்கிழமை முதல் ரழமான் நோன்பு துவங்கியது.

சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது. இதனையொட்டி தராவீஹ் என்னும் சிறப்பு இரவுத் தொழுகை பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது.

நோன்பு திறப்பதற்காக பல்வேறு பள்ளிவாசல்களிலும் பழச்சாறு, பேரிச்சம்பழம், பிரியாணி உள்ளிட்டவற்றுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் முகாம்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஓமன் நாட்டில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக