வியாழன், 12 ஜூலை, 2012

துபாய் அதிர்ஷ்ட குலுக்கலில் இந்தியருக்கு ரூ.5.5 கோடி பரிசு 2 பேருக்கு சொகுசு கார்


துபாய் : துபாயில் நடந்த மில்லினியம் கோடீஸ்வர அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.5.5 கோடி முதல் பரிசு இந்தியருக்கு கிடைத்தது. மேலும் 2 இந்தியர்கள் சொகுசு கார்களை பரிசாக வென்றனர். துபாயில் 1999ம் ஆண்டு முதல் 2000வது ஆண்டை குறிக்கும் மில்லினியம் கோடீஸ்வரர் அதிர்ஷ்ட குலுக்கல் நடந்து வருகிறது. 13வது ஆண்டுக்கான குலுக்கல் சமீபத்தில் நடந்தது.

அதில் ஸ்ரீஜு நம்பிரான் என்ற இந்தியர் முதல் பரிசை வென்றார். அவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.5.5 கோடி) பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் அவர். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மில்லினியம் கோடீஸ்வரர் அதிர்ஷ்ட குலுக்கலில் கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்று வந்தேன். ஆனால், இந்த முறை பரிசு வெல்வேன் என்று நினைக்கவில்லை. பரிசை வென்றதாக போனில் தகவல் வந்தபோது நம்பவில்லை. பிறகு எனது விவரங்களை அவர்கள் சரியாக கூறியதும் திடீர் கோடீஸ்வரனாகி விட்டதை உணர்ந்தேன்’’ என்றார்.

நம்பிரான் தவிர துபாய் பைனஸ்ட் சர்ப்ரைஸ் என்ற மற்றொரு குலுக்கலில் மேலும் 2 இந்தியர்கள் சொகுசு காரை பரிசாக வென்றனர். பக்ரைனில் வசிக்கும் இலம்துருதி ஜோசப் என்ற இந்தியர் மெர்சிடஸ் பென்ஸ் கார் பரிசு பெற்றார். டெல்லியை சேர்ந்த கெயூர் முகமது கான் என்பவர் பிஎம்டபிள்யூ கார் வென்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக