பரங்கிப்பேட்டை : வீடு புகுந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவத்தில்
ஈடுபட்ட 3 பேரை சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக், 75. இவரது மனைவி ஜெகருன்னிசா, 70. இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் அவரது செயினை பறிக்க முயன்ற வழக்கில் ஜெகதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜெகதீஷ் கொடுத்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ரமேஷ், நாராயணசாமி மற்றும் பாட்ஷா ஆகியோரை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் முட்லூரில் ஜெகருன்னிசா செயினை பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்ட நாராயணசாமி, 32, பாட்ஷா, 31, என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் பரங்கிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும் நேற்று காலை புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்புப்படை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டுகள் பாபு, தேவகிருஷ்ணன், சத்திவேல், சிவசங்கர், பத்மநாபன் ஆகியோர் புதுச்சத்திரம் செக்போஸ்ட் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த விஜயராகவன், அவரது மனைவி மஞ்சு ஆகியோரிடம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே வழிமறித்து செயினை பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த சமட்டிக்குப்பம் ராமஜெயம் என்பதும் தெரியவந்தது. உடன் போலீசார் ராமஜெயத்தை, 23. கைது செய்தனர்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக