பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக சர்ஃபேஸ் எனப்படும் புதிய டேப்லெட் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் இதை அறிமுகப்படுத்தினார். விண்டோஸ் 8 இயக்க அமைப்பில் செயல்படக்கூடிய இந்த டேப்லெட்டுகள், ஏற்கெனவே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தனது சொந்தத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை சர்ஃபேஸ் டேப்லெட்டுகளில் மைக்ரோசாப்ட் அளிக்கவுள்ளது. இதில் உள்ள டச் கவர் எனப்படும் திரையை மூடக்கூடிய மெல்லிய மூடி போன்ற அமைப்பு கீ போர்டாகவும், டிராக் பேடாகவும் செயல்படவல்லது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக