புதுடெல்லி:ஜனாதிபதி தேர்தல் காரணமாக பாரதீய ஜனதா கட்சி
எதிர்பாராத இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்,
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ்தான். ஜனாதிபதி வேட்பாளர் யார்
என்ற பேச்சு எழுந்த போது இவர்தான் முந்திரிக் கொட்டையாக முந்திக் கொண்டு, காங்கிரஸ்
வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என்றார். இதனால் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்
கொடுத்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்யும் முயற்சிகள்
முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.வின் நிலை மேலும் மோசமானது. பிரணாப் முகர்ஜியை எதிர்த்து யாரையாவது நிறுத்தலாம் என்றால் பா.ஜ.க. தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் பிரணாப்பை எதிர்க்க பா.ஜ.க.வில் ஆளே இல்லை என்ற தோற்றம் உருவானது. என்றாலும் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிடாவிட்டால் பெயர் கெட்டு விடும் என்ற எண்ணத்தில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அனந்தகுமார் மூவரும் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
முதலில் அவர்கள் அப்துல்கலாமுக்கு வலை வீசினார்கள். அவர் இயலாது என்று நழுவி விட்டார். இதனால் அவர்கள் மூவரும் சேர்ந்து சங்மாவை குறிவைத்து காய்களை நகர்த்தினார்கள். இதற்கு கட்சிக்குள்ளும், கூட்டணி தலைவர்களிடமும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சங்மாவை ஆதரிக்க பா.ஜ.க. தலைவர் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, எடியூரப்பா, மேனகாகாந்தி போன்றவர்களுக்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை.
அத்வானிக்காக அவர்கள் மவுனமாக உள்ளனர். ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனாவும் வெளிப்படையாக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. எனவே சங்மாவை பா.ஜ.க. ஆதரித்தாலும், அவருக்கு 30 சதவீத ஓட்டுகள் கூட கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை இப்போதே அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை தடுக்கும் வகையில் ஐக்கிய ஜனதா தளம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஐக்கிய ஜனதாதளம் பா.ஜ.க வுக்கு மீண்டும் நெருக்கடி கொடுத்திருப்பது காங்கிரசாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையை அப்படியே நீடிக்க செய்து, ஐக்கிய ஜனதாதளம் கட்சியை தங்கள் அணிக்குள் கொண்டு வர காங்கிரசார் தீவிரமாகி உள்ளனர். எனவே பாரதீய ஜனதா கூட்டணி உடையும் அபாயத்தில் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் சுமூக உறவுடன் இருந்தால் 2014 தேர்தலில் கூடுதல் எம்.பி.க்கள் இடங்களை பெற முடியும் என்று காங்கிரசார் நினைக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்து செல்ல காங்கிரசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் மம்தாபானர்ஜி சண்டை கோழியாக மாறி நின்றாலும் அவரை விலக்க காங்கிரசார் நினைக்கவில்லை. நாளடைவில் இடதுசாரிகளையும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் திட்டத்துடன் காங்கிரசார் உள்ளனர். ஆனால் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால் பா.ஜ.க.வில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக