வியாழன், 21 ஜூன், 2012

சிதம்பரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் விமான, ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு மையம் துவக்கம்


சிதம்பரம்:சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் விமான டிக்கெட் மற்றும் ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள இந்திய அஞ்சல் துறை தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக் கையை ஏற்ற அஞ்சல் துறை தலைவர், சிதம்பரம் அஞ்சல் நிலையத்தில் இந்த சேவையை துவக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை சிதம்பரம் அஞ்சல் நிலையத்தில் விமான, ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு மைய துவக்க விழா நடந்தது. மையத்தை பாலகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை அஞ்சல் அதிகாரி ராமலிங்கம், உதவி அஞ்சல் அதிகாரி செல்வராஜ், தபால்துறை அதிகாரி ரவி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரம் நகர செய லாளர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேசன், கலீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக